×

டிஆர்டிஓ உருவாக்கிய பவுடர் வடிவில் கொரோனா மருந்து: அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

புதுடெல்லி: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு உருவாக்கிய கொரோனா மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென குறிப்பிட்ட எந்த மருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாக ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஆர்டிஓவின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) மற்றும் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைந்து 2 டியோக்ஸிடி குளுக்கோஸ் (2டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் போன்றது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.  

2 கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மருந்தை பெற்ற நோயாளிகள் விரைவில் குணமடைவது நிரூபணமாகி உள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2டிஜி மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தந்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சக அறிக்கையில், ‘‘மே 1ம் தேதி முதல் அதிக மற்றும் நடுத்தர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை எளிதாக தயாரிக்க முடியும் என்பதால் அதிகளவில் விநியோகிக்க எளிதானது. இது வைரஸ் உற்பத்தியை கட்டுப்படுத்தி, உடலில் ஆற்றலை ஊக்குவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Corona medicine in powder form developed by TRDO: Permission for emergency use
× RELATED பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்...